‘திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரே மாதத்தில் தீர்வு’

‘திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரே மாதத்தில் தீர்வு’

1 mins read
a419102a-746c-4eb7-9113-8bac27b415e6
தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுக்கோட்டை: திமுகவினர் மீதுள்ள வழக்குகள் குறித்த பட்டியலைத் தந்தால், ஒரு மாதத்துக்குள் அவற்றுக்குத் தீர்வுகாணப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக நகர பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ். ரகுபதி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், தன் மீது வழக்கு இருந்ததால் வெளிநாடு செல்ல முடியவில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

அவர் மீது மட்டுமல்ல, என் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுகவினர் மீதான வழக்கு விவரங்களைத் திரட்டி, 10 லட்சம் வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டன.

எனினும், காவல் துறையினர் வழக்கு விவரங்களை முறையாக கொடுக்காததால்தான், கட்சியினர் மீது சில வழக்குகள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளன என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்