சென்னை: பழனி முருகன் கோவிலில் உள்ளது போன்ற ரோப்கார் சேவை சென்னையிலும் அறிமுகப்படுத்தபட உள்ளது.
இதற்காக சென்னை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் இருந்து மெரினா கடற்கரை வரை ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
டிசம்பர் 17ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட இருந்ததாக மாநகராட்சி தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரை அழகுபடுத்தும்விதமாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

