பெருந்துறை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான வங்கியுடன் இணைந்த கடன் உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் திட்டத்தைத் தொடங்கிவைத்த முதல்வர் விஜய், மகளிரின் பொருளியல், வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களைச் சுயசார்புடைய தொழில்முனைவோராக மாற்றுவதே கடன் உதவித் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று கூறினார்.
விழாவில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட திரு விஜய், 38 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தயாரித்த கைவினைப் பொருள்கள், பத்தமடைப் பாய், மரச்சிற்பங்கள், வாழைநார்ப் பைகளை உரிய தொகையைக் கொடுத்து வாங்கினார். நீலகிரி மலைவாழ் மக்கள் தயாரித்த தேநீரையும் ருசித்தார்.
