ரயில்வே தேர்வு மையத்தை மாற்ற சு.வெங்கடேசன் கோரிக்கை

1 mins read
367d6929-5883-43a3-80a9-f708843999e9
சு.வெங்கடேசன். - படம்: ஊடகம்

மதுரை: ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ‘லோகோ பைலட்’ பணியிடத்துக்கான தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து 6,000 பேர் தேர்வாகி உள்ளனர்.

இவர்களுக்கான நீட் தேர்வு வரும் 19ஆம் தேதி, தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கு 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையம் அமைத்திருப்பதை மாற்றக்கூறி மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“மதுரை நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் என்னை அணுகி தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“ஆகவே, தேர்வு மையங்களை உடனடியாக மாற்ற வேண்டும்,” என அவர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்