சென்னை: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், நில அபகரிப்பு தொடர்பாக தவறான தகவல்களை யூடியூப் சேனல் வழியாக பரப்பியதாக அவரை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் சார்பில் பிணை கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அந்த வழக்கு வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரை பிணையில் விடுவிக்கக்கூடாது என்று காவல்துறை சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
சவுக்கு சங்கர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், “காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் கட்சிக்காரர் மீது காவல்துறை தொடர்பாக வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இரு தரப்பினரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரரின் பேட்டி பிடிக்கவில்லை என்பதற்காக அவரைக் கைது செய்யவேண்டிய அவசியமில்லை.
இந்த வழக்கில் மனுதாரர் மீது, இருமுறை குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு நிவாரணம் வழங்கியபோதும் தொடர்ச்சியாக அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அணுகுமுறை சட்டத்தின் மீதான மரியாதையைக் குறைக்கும் விதமாக உள்ளது. மனுதாரர், அற்ப காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
காவல்துறையின் தவறான நடத்தை, எல்லா இடங்களிலும் தெளிவாகத் தெரிகிறது என்பதால், அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது, என தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை. கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க ஏன் மறுத்தது என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. சில கருத்துகளை தெரிவித்ததற்காக, சிலர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவதை பார்க்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை தீய நோக்கத்துடன் முன்கூட்டியே செயல்படுவதைத் தடுக்க முடியாத சூழலில், நிலைமை படுமோசமாவதற்கு முன்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் செசன்ஸ் நீதிமன்றங்களும் தலையிட்டு தடுக்கலாம். பிணை கேட்டு மனு தாக்கல் செய்தால் அதனை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.