முல்லைப் பெரியாறு அணையில் மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு

1 mins read
e478778f-d569-473e-afe2-42dcf466244d
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி, விஞ்ஞானிகள் ஆய்வைத் தொடங்கி உள்ளனர். - கோப்புப்படம்: தினத்தந்தி

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ‘ரிமோட் நீர்மூழ்கி’ மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த அணையில் கட்டுமானப் பணிகள் தண்ணீருக்குள் மறைந்துள்ள நிலையில், இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையானது, தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைக்கும் அளவு தொடர்பாக, தமிழகம், கேரளா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

அணையில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கிக்கொள்ளும் அளவுக்குக் கட்டப்பட்ட போதும், கடந்த 1978ஆண்டு அணை பலம் இழந்துவிட்டதாகக் கூறி கேரள அரசு நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்துவிட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி, விஞ்ஞானிகள் ஆய்வைத் தொடங்கி உள்ளனர்.

நீருக்குள் உள்ள அணையின் கட்டுமானம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் இது மிகவும் நுணுக்கமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைச் சேமிக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்