விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

1 mins read
78e8b2cb-db50-45fc-a7d9-a08cc44eac57
விஜய்யின் நீலாங்கரை வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட காவல்துறையினர். - படம்: ஒன் இந்தியா

சென்னை: வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஜய்யின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.

தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில், அவருக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவிக்க ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் அங்கு திரண்டு சென்றனர்.

தேர்தல் எழுச்சியால் உற்சாகமடைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், அதிகாலை முதலே கட்சியின் தலைவர் விஜய் வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வருவதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில், அவருக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவிக்க ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் அங்கு திரண்டனர்.

மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகரக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய்யின் வீட்டிற்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்