தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டணி பரபரப்பு: செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்

1 mins read
29b16e4d-74bf-46fa-8ca3-0ac358721abe
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.  - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியை ஏற்படுத்தும் ஆக அண்மைய முயற்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்குப் பறந்துள்ளார்.

அதனால், தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பு அடைந்துள்ளது.

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், கேபி முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

அந்தச் சந்திப்பால் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.

அதிமுக, பாஜக தலைவர்களும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.

இந்தச் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று பாஜகவின் தேசியத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு விரைந்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்