சென்னை: அமலாக்கத் துறை தன்னிடம் விசாரிப்பதை தற்காலிகமாக ஒத்திவைக்கக் கோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று வழக்குகளைத் தொடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், அம்மூன்று வழக்குகள் முடிவடையும் வரை அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை அவரது தரப்பு திடீரென திரும்பப் பெறுவதாகக் கூறியதை அடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.