திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை

திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை

1 mins read
00bf1aaa-c671-41f2-be85-9258c38c23df
செந்தில் பாலாஜியை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். - கோப்புப் படம்: பிடிஐ

சென்னை: முதல்வர் விஜய்யின் தவெக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரை விலைக்கு வாங்க முயற்சி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர்மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்பிணை வழங்கி கடந்த 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் மறுஉத்தரவு வரும்வரை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் காலையும் மாலையும் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை அன்று இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு சரணடைந்து பிணை செலுத்தினார். பிணையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

அதன்படி, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜி முன்னிலையானார்.

அப்போது, ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு அவரிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை இன்னமும் தொடர்கிறது. தவெக எம்எல்ஏவை வாங்க செந்தில் பாலாஜி முயற்சி செய்தாரா என்பதை அறிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்