சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஷமீம் அகமது பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஷமீம் அகமது பதவியேற்பு

1 mins read
bb50d43b-b405-4dfc-b152-9cd2a970cbc1
நீதிபதி ஷமீம் அகமது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்த ஷமீம் அகமதுவை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி காலை நடந்த பதவியேற்பு விழாவில் நீதிபதி ஷமீம் அகமதுவுக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற சக நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இருந்தும், 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்