திமுகவிற்கு அதிர்ச்சி: 14 நிர்வாகிகள் இருந்த வாக்குச்சாவடியில் 5 வாக்குகள்

திமுகவிற்கு அதிர்ச்சி: 14 நிர்வாகிகள் இருந்த வாக்குச்சாவடியில் 5 வாக்குகள்

1 mins read
0df74efa-9fcb-4504-b492-461d53adb08c
தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப் படம்: நியூஸ்மினிட்
Google News Preferred Icon

திருவரங்கம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினரே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

திருவரரங்கம் தொகுதியில் மொத்தம் 2,87,027 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 2,55,293 பேர் வாக்களித்தனர்.

இந்தத் தொகுதியில் தவெக வேட்​பாளர் ரமேஷ் 1,03,235 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். மேலும், திமுகவின் துரை​ராஜ் 69,645 வாக்​கு​களும் அதி​முகவின் மனோகரன் 65,819 வாக்​கு​களும் பெற்​றனர்.

இந்நிலையில், திருவரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91வது வாக்​குச்​சாவடி​யில் திமுக வேட்​பாளருக்கு வெறும் ஐந்து வாக்​குகள் மட்​டுமே கிடைத்துள்​ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள், இளைஞரணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி எனத் தலா 14 பேரை நியமித்ததாக திமுக கூறியிருந்தது.

இதனிடையே, 91வது வாக்குச்சாவடியில் அக்கட்சிக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதாவது, அவர்களின் கட்சியினரே அவர்களுக்கு வாக்களிக்கவில்லை எனப் பொருளாகிறது.

இதுகுறித்து, திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, அந்த வாக்குச்சாவடியில் இருந்த திமுக நிர்வாகிகளே வாக்களிக்கவில்லையா அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்