தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிங்கா 60’ கலைத் திருவிழா தொடங்கியது

1 mins read
a3d940e4-2fb5-4734-a97b-95b6ac61ddf1
சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க், கலைத் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசினார். - படம்: ஊடகம்

சென்னை: ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலைத் திருவிழாவை சென்னை அடையாறில் உள்ள போரம் ஆர்ட் கேலரியில் ஆகஸ்ட் 1ஆம் தொடங்கியது.

இதில் இந்தியா, சிங்கப்பூரை சேர்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் தொடங்கி வைத்து பேசினார்.

முதல் நாள் நிகழ்ச்​சி​யில் இடம்​பெற்ற இந்​தி​ய-சிங்​கப்​பூர் ஓவிய, சிற்​பக்​கலைஞர்​களின் படைப்​பு​கள் பார்​வை​யாளர்​களை வியக்க வைத்​தன.

இக்கலைவிழாவில் இசை, நாடகம், ஆவணப் ​படம், அரசி​யல், கலை, கலா​சா​ரம், சமையல், குழு விவாதம், கருத்​தரங்​கம் என பல்​சுவை நிகழ்ச்​சிகள் இடம்பெற உள்ளன.

குறிப்புச் சொற்கள்