தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூர் கலைஞர்களின் படைப்புகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சி, உணவு விழா, அறிவுசார் கருத்தரங்கம் என 10 நாள் கொண்டாட்டம்

சென்னையில் ‘சிங்கா 60’ பெருவிழா

3 mins read
ab05c967-7a95-4afe-95b8-7a4f3354c730
ஆகஸ்ட் 1 முதல் 10ஆம் தேதி வரை சென்னையில் ‘சிங்கா 60’ விழா பெரிய அளவில் நடைபெறுகிறது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை:  சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 முதல் 10ஆம் தேதிவரை சென்னையில் ‘சிங்கா 60’ விழா பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. குறிப்பாக சிங்கப்பூர், தமிழ்நாடு இடையிலான உறவு தனித்துவம் மிக்கது. சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் விளங்குகிறது. இருநாடுகளுக்கும் இடையே பண்பாடு, பொருளியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் ஆழமாக உள்ள உறவையும் பிணைப்பையும் பிரதிபலிக்கும் வகையில் சிங்கா 60 விழாவை இந்து நாளிதழ் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.

விழாவின் ஓர் அங்கமாக அகம் தியேட்​டர் ‘லேப்‘ படைக்கும் ‘முச்​சந்​தி’ நாடகம் ஆகஸ்ட் 2ஆம் தேதி அரங்​கேற்​றப்​பட​வுள்​ளது.

ஆகஸ்ட் 4, 5 தேதி​களில் நடைபெறும் ‘ஸ்​கிரீன் சிட்​டி’ நிகழ்ச்சி, இந்​தி​யத் திரைப்​படங்​களில் சிங்​கப்​பூர் எவ்​வாறு சித்​திரிக்​கப்​பட்டு வரு​கிறது என்​பது குறித்து சுவாரசி​ய​மாக விவரிக்​கப்​படும்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி நடை​பெறும் ‘இண்​டியா கனெக்ட்- சிங்​கப்​பூர் எடிஷன்’ கருத்தரங்கம் இரு நாடு​களுக்கு இடையி​லான அரசியல், பொருளியல் தொழில்​நுட்ப உறவு​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கும்.

ஆசிய ஆய்வுக் கழகத்​தைச் சேர்ந்த கிஷோர் மது​பானி, மத்​திய அரசின் தலைமை பொருளியல் ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன், மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்​பத் துறை செய​லா​ளர் கிருஷ்ணன், சிங்​கப்​பூர், பிரான்ஸ் நாடு​களுக்​கான முன்​னாள் இந்​திய தூதர் ஜாவத் அஷ்ரப் உள்​ளிட்​டோர் கருத்தரங்கில் பங்​கேற்க உள்​ளனர்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி சௌந்​தர்யா சுகு​மார் தயாரித்த மகாகவி பார​தி​யாரின் சிறப்பு ஆவணப் படமான ‘சக்​தி​தாசன்’ திரை​யிடப்படுகிறது.

‘கேபெல்​லா’ இந்​திய, சிங்​கப்​பூர் பாணி இசைக் கச்​சேரியும் அன்று நடை​பெறுகிறது.

ஆகஸ்ட்1 முதல் 10 வரை சென்னை மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் ‘காலம் ​காலமாகச் சிங்கப்பூர்’ (Singapore through the ages) என்ற தலைப்​பில் இந்து குழு​மத்​தின் ஆவணக் ​காப்​பகத்​தின் தொகுப்பு அடங்​கிய சிறப்புக் கண்​காட்சி இடம்பெறுகிறது.

சிங்​கப்​பூர் அரசி​யல், பண்பாடு, கலை, சமையல், வங்​கித்துறை​யில் தமிழக நாட்​டுக்​கோட்டை செட்​டி​யார் சமூகத்​தின் பங்​களிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படையி​லான ஆவணங்​களைக் கண்​காட்​சி​யில் காணலாம்.

சிங்கப்பூர், இந்தியாவைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் ‘நகரத்தின் சிந்தனைகள்’ கண்காட்சி ஆகஸ்ட் 1 முதல் 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

குமரி நாகப்பன், கவிதா பத்ரா, பி.ஞானா, மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா உள்ளிட்ட பலரின் படைப்புகள் அக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

சிங்கப்பூரின் விருதுபெற்ற கலைஞரான அரவிந்த் குமார​சாமி, சிற்பி குமரி நாகப்​பன் ஆகியோர் விழாவில் சிறப்​புரை​ ஆற்​று​கின்றனர்.

‘சிங்​கப்​பூரின் சுவை’ என்ற பெயரில் சிங்​கப்​பூர் சமையல் கலைஞர் சௌமியா வெங்​கடேசனின் பிரம்​மாண்ட உணவுத் திரு​விழா, சென்னை ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்​டலில் நடை​பெறுகிறது. இதில் சோ யூ, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ ஆகிய பிரபல ஹோட்​டல்​களும் பங்​கேற்​கின்​றன.

இந்து தமிழ் திசை’, ‘தி இந்து குழுமம்’ , ‘தி இந்து பிசினஸ்லைன்’ இணைந்து நடத்தும் இந்த விழாவிற்கு சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி ஆகியவற்றுடன் தமிழ்​ முரசு நாளிதழ்​ உள்ளிட்ட பல நிறுவனங்கள், அமைப்புகளும் ஆதரவு வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்