சென்னை: வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் சனிக்கிழமை (நவம்பர் 30) மாலை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உட்படப் பல பகுதிகளில் இருந்து வரும் ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
புயல் காரணமாக, சென்னையில் கனமழை பெய்துவருகிறது. பல விமானச் சேவைகள் ரத்தான நிலலையில், குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருவதாக இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
காலை 7 மணி நிலவரப்படி, ‘ஃபெங்கல்’ புயல் வங்கக்கடலில் சென்னைக்குத் தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
புதுச்சேரிக்கு அருகே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே அது கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவை கூறின.