31 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை

31 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை

கோப்புப் படம்: பிக்சாபே

17 Nov 2025 - 9:48 pm

1 mins read

சென்னை: கடந்த மாதம் 30ஆம் தேதி நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 31 மீனவர்கள், கோடியக்கரை தென் கிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 31 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட 31 மீனவர்களும் இலங்கை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 31 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டது. அத்துடன், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 31 மீனவர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்