திமுக, மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பு

திமுக, மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பு

1 mins read
4cf02a04-b779-40e4-8652-07c633ef3c77
செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், அடுத்த ஏழு நாள்களில் தொகுதி உடன்பாடு நிறைவுபெறும் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டார். - படம்: ஈடிவி பாரத்

சென்னை: கடந்த முறை போட்டியிட்டதைவிடக் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவது என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மார்ச் 15ஆம் தேதியன்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப் பங்கீடு குறித்த மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், அடுத்த ஏழு நாள்களில் தொகுதி உடன்பாடு நிறைவுபெறும் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

கூட்டணியில் பல கட்சிகள் இணையும்போது இதுபோன்ற சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. அதை உணர்ந்துள்ளோம்.

“காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கியதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. காங்கிரசுக்கு 65 தொகுதிகளை ஒதுக்கினாலும் எதிர்க்க மாட்டோம். அதேசமயம் எங்கள் முடிவில் தெளிவாக உள்ளோம்,” என்றார் சண்முகம்.

குறிப்புச் சொற்கள்