தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்டாலின்: ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்

2 mins read
a2deff56-f7fe-42b0-867f-ab5258129c25
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மக்களவைக்கான 2024 தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதி களுக்கு 6 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

எட்டு மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, வரும் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப் படும்.

இத்தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள், டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதில் பங்கேற்க 28 கட்சி களின் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், இண்டியா கூட்டணி வெற்றியின் முகட்டில் நிற்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்தியாவை கடந்த பத்தாண்டு காலமாக ஆட்டிப் படைத்த பாஜக ஆட்சியை வீழ்த்தி இந்தியாவைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி வெற்றியின் முகப்பில் நிற்கிறது.

“வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புணர்வுடன் இண்டியா கூட்டணியின் செயல்வீரர்கள் செயல்பட வேண்டும்,” என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத் தெறிந்துவிட்டனர். இண்டியா கூட்டணியின் வெற்றிச் செய்தியை எட்ட இன்னும் மூன்று நாட்களே உள்ளன,” என்று முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள், முகவர்கள், வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இண்டியா கூட்டணித் தலைவர்கள் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக, சனிக்கிழமையன்று கூடி விவாதித்தபோது, அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.

டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்த ஆலோச னைக் கூட்டம் நடத்ததாகவும் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதே தமது விருப்பம் என அவர் கூறியதாகவும் தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திமுக சார்பில் டி.ஆர்.பாலு ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.

குறிப்புச் சொற்கள்