ஸ்டாலினுக்குப் பொருத்தப்பட்ட பேஸ் மேக்கர் கருவி

1 mins read
937f0ab2-d91f-4bee-bb7c-6fb9c694c510
மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க அவருக்கு அக்கருவியைப் பொருத்தியிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

72 வயதான மு.க.ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதியன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனையுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சீரற்ற இதய துடிப்பு இருந்ததால், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ நிர்வாகம் கூறியது.

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த, இதய சிகிச்சை நிபுணர் நரசிம்மன், தலைமையிலான குழுவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவியை பொருத்தினர்.

“இக்கருவி முதல்வர் தன் அன்றாட நடவடிக்கைகளை, மேலும் சிறப்பாக மேற்கொள்ள உதவும். உடல்நிலையை சீராக வைக்க உதவும்,” என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்