பழனி பஞ்சாமிர்த கடைகளில் சோதனை

பழனி பஞ்சாமிர்த கடைகளில் சோதனை

1 mins read
9efcee77-950c-44ca-8c10-eb4bb1140538
-

பழனி: பழனி கிரிவீதி பகுதியில் பஞ்சாமிர்த கடைகளுக்கு நேற்று முன்தினம் அதிகாலை மதுரை, திண்டுக்கல் பகுதிகளைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கடை உரிமையாளர்களின் வீடுகள், விடுதிகள், ஹோட்டல்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்றும் சோதனை நடத்தினர். பஞ்சாமிர்த கடைக்காரர்கள் வரி ஏய்ப்பு நடத்தி உள்ள தாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து சோதனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்