குடும்ப பிரச்சினை காரணமாக மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கடித்ததில் மாமியாரின் தலையில் படுகாயம் ஏற்பட்டு ஆறு தையல் போடப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் நிகழ்ந்துள்ளது.
பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின் நகர் பகுதியை சேர்ந்த 62 வயது நாகேஸ்வரி 62 பத்திர எழுத்தராக இருக்கிறார். அவரது மகன் சரவணகுமார்.
தற்போது 38 வயதாகும் சரவணகுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தை சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சரவணகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்பில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மனைவி கண்டிக்கும்போதெல்லாம் சரவணகுமார் தனது தாயார் நாகேஸ்வரியின் வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். அதனால் கல்பனா, நாகேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை மருமகள் கல்பனா தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலிசில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை திரும்பப் பெறக் கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 14) அன்று நாகேஸ்வரி மின் நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டார். மாமியாரைத் தாக்கி அவரது தலைப் பகுதியில் கடித்தார் கல்பனா.
மருத்துவமனைக்கு சென்ற நாகேஸ்வரிக்கு மருத்துவர்கள் ஆறு தையல் போட்டுள்ளனர்.
இதன் தொடர்பிலான புகாரின்பேரில் மருமகள் கல்பனாவை போலிசார் கைது செய்துள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity