தாயையும் குழந்தையையும் லாவகமாக தாண்டிச் சென்ற காளை

தாயையும் குழந்தையையும் லாவகமாக தாண்டிச் சென்ற காளை

1 mins read
dc366570-8725-44d8-ae59-3c18d876e15f
தாயுடன் குழந்தையை கண்ட காளை, அவர்களை தாண்டி ஓடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி வருகின்றன. படங்கள்: இணையம் -
multi-img1 of 3

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் வீரர்களுக்கு நடுவே காளை ஒன்று சீறிப்பாய்ந்து வந்தது.

அப்போது, திடீரென ஒரு பெண் தனது குழந்தையுடன் எதிரே நிற்பதை அந்தக் காளை கண்டது.

உடனே, தனது ஆக்ரோஷத்தை அடக்கிய அந்தக் காளை, அந்தப் பெண்ணையும் குழந்தையையும் தாக்காமல் லாவகமாக தாண்டிக் குதித்து சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

களம் காணும் காளைகள் பொதுவாக ஆக்ரோஷத்துடன் எதிரே வருபவர்களை குத்திக் கிழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும்.

ஆனால், தாயுடன் குழந்தையை கண்ட இந்தக் காளையோ, அதை எல்லாம் மறந்து, அவர்களை தாண்டி ஓடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி வருகின்றன.

#தமிழ்முரசு #ஜல்லிக்கட்டு #தாண்டிய #காளை #சிவகங்கை

குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டுஅலங்காநல்லூர்காளை