பூனையின் அட்டூழியம்; தொலைக்காட்சி விழுந்ததில் குழந்தை பலி

பூனையின் அட்டூழியம்; தொலைக்காட்சி விழுந்ததில் குழந்தை பலி

1 mins read
e8b66d26-bf6c-4c97-b4e6-9990429f5477
மொய்தீன் - ரே‌‌ஷ்மா தம்பதியின் மகள் நாஷியா பாத்திமா. படம்: ஊடகம் -

சென்னை அயனாவரத்தில் வீட்டுக்குள் புகுந்த பூனை ஒன்று அங்கு மிங்கும் ஏறிக்குதித்து தொலைக்காட்சி பெட்டியைத் தள்ளிவிட்டதில், தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.

வீட்டில் இருந்த பீரோ மீது தாவி ஏறிய பூனை, அங்கி ருந்து தொலைக்காட்சியின் மேல் குதித்து ஓடியதில் நாற்காலி மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டி தலைகுப்புற சாய்ந்தது. அருகில் கீழே தரையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மேல் தொலைக்காட்சிப் பெட்டி விழுந்தது.

சென்னை அயனாவரம் சூளைமேடு தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன்.

குளிர் சாதன இயந்திரத்தை பழுதுபார்ப்பவர்; இவருடைய மனைவி ரே‌‌ஷ்மா.

இவர்களின் ஒரே மகள் நா‌ஷியா பாத்திமா. நேற்று மாலை தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்