திமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு

திமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு

1 mins read
f6d32674-36a8-4e0b-8235-955d6209b1ce
திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகனும், 8 வது பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். படம்: இந்திய ஊடகம் -

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து காணொளி வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றனர்.

அதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70க்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பங்கேற்றனர்.

திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகனும், 8 வது பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை மீண்டும் பொதுச்செயலாளரிடமே ஒப்படைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

புதிய பொறுப்புகளை ஏற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் திரு ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கலந்துக்கொண்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, உடல்நலக்குறைவால் பாதியிலேயே வெளியேறினார்.

காலை சுமார் 11 மணி அளவில் அரங்கத்தில் இருந்து அவர் வெளியே வந்தார். உள்ளே ஏசி இருப்பதால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதால் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்