வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்கள்

வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்கள்

1 mins read
fe679b10-17ab-4b7d-a721-d3bf92762b70
மோட்டார்சைக்கிள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

தமிழகத்தில் 'நிவர்' புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது நாம் தெரிந்ததே.

குறிப்பாக சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மூன்று அடி முதல் ஐந்து அடி வரை தண்ணீர் நிரம்பிவிட்டது.

இந்த நிலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் காரணமாக சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார்சைக்கிள் மற்றும் வாகனங்கள் பழுதடைய வாய்ப்பு இருக்கிறது.

2015ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் புயல் நேரத்தில் சேதமடைந்தது நினைவுகூரத்தக்கது. இம்முறை தங்களது வாகனங்களை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக அதன் உரிமையாளர்கள் புதிய யோசனை ஒன்றை செய்தனர்.

தற்போது வாகனங்கள் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேம்பாலங்கள் காலியாகத்தான் உள்ளன. இதனை அடுத்து மோட்டார்சைக்கிள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். வாகன நிறுத்தும் இடங்களாக காட்சியளிக்கும் மேம்பாலங்களைக் காட்டும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்