இரண்டு நாள்களாகியும் வடியாத மழைநீரால் மக்கள் பெரும் அவதி

நிவர் புயல் பாதிப்ை­பத் தொடர்ந்து, சென்­னை­யின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இன்­னும் வெள்ள நீர் வடி­யா­மல் தேங்கி நிற்­கும் நிலை காணப்­ப­டு­கிறது.

இத­னால், மக்­கள் கடை­க­ளுக்­கும் இதர முக்­கி­ய­மான காரி­யங்­க­ளுக்­கும் செல்­ல­மு­டி­யா­மல் பெரும் அவ­திப் பட்டு வரு­கின்­ற­னர்.

“மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் துரி­த­மாக இதற்கு ஒரு தீர்வு கண்டு, மழை­நீரை அகற்­ற­வேண்­டும்,” என அந்­தந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த மக்­களும் கோரி­யுள்­ள­னர்.

தங்­கள் வீடு­களில் புகுந்­துள்ள நீரைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் சிலர் பாத்­தி­ரங்­க­ளால் இரைத்து ஊற்­றி­யும் வெளி­யேற்றி வரு­கின்­ற­னர்.

நிவர் புய­லைத் தொடர்ந்து கன­மழை பெய்து இரு நாள்­க­ளா­கிய பின்­ன­ரும், சென்­னை­யின் பல பகு­தி­க­ளி­லும் மழை­நீர் வடி­யா­மல் தேங்கி நிற்­கிறது.

சென்னை கொளத்­தூ­ரில் உள்ள டீச்­சர்ஸ் காலனி குடி­யி­ருப்­புப் பகுதி களில் தேங்கி நிற்­கும் மழை நீரால், கடை­க­ளுக்­குச் செல்­ல­மு­டி­யா­மல் மக்­கள் அவ­திப்­ப­டு­கின்­ற­னர்.

இதே­போன்று தில்லை நகர், செல்வி நக­ரி­லும் மழை­நீர் முழங்­கால் அள­விற்கு தேங்கி நின்­றது.

வீடு­களில் மழை­நீர் புகுந்­துள்ள தால், பெரும்­பா­லா­னோர் தங்­க­ளது உற­வி­னர்­க­ளின் வீடு­களில் அடைக்­க­லம் புகுந்­துள்­ள­னர்.

சிலர் சிறிய மோட்­டார் பம்பை வைத்து தங்­கள் வீடு­களில் இருந்து தண்­ணீரை வெளி­யேற்­றி­னர்.

பெரி­யார் நக­ரில் உள்ள ஜெக­நா­தன் தெரு, அரசு மருத்­துவ மனை வளா­கம் உள்­ளிட்ட பகுதி களி­லும் மழை­நீர் தேங்கி உள்­ளது.

வில்­லி­வாக்­கம் பாபா நகர் பால விநா­ய­கர் ஆல­யம் அமைந்­துள்ள பகுதி முழு­வ­தும் மழை­நீர் தேங்கி உள்­ளது. அந்­தப் பகு­தி­யின் பெரும்­பா­லான வீடு­களில் கடந்த மூன்று நாட்­க­ளாக மின்­சா­ரம் இன்றி மக்­கள் அவ­திப்­பட்டு வரு­வ­தாக அதே பகு­தி­யைச் சேர்ந்த பாலாஜி என்­ப­வர் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை செங்­குன்­றம் பகுதி யில் உள்ள விவேக் அக்­பர் அவென்யூ, மகா மேர் நகர் போன்ற பகு­தி­கள் மழை­நீ­ரால் சூழப்­பட்டு தீவு போல் காட்சி அளிக்­கின்­றன. வியா­சர்­பாடி முல்லை நகர் சாலை யில் தேங்கி உள்ள மழை­நீர் வடியா மல் குளம்­போல் காட்சி அளிப்­ப­தாகவும் தக­வல்­கள் கூறியுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!