உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 50% தள்ளுபடியில் புத்தக விற்பனை

1 mins read
5bf42dfe-7819-45dc-a6e8-5878fab0e7d2
படம்: ஊடகம் -

உல­கத் தமி­ழா­ராய்ச்சி நிறு­வ­னம் அதன் பொன்­வி­ழாக் கொண்­டாட்­டத்­தைத் தொடர்ந்து 30 முதல் 50 விழுக்­காட்­டுத் தள்ளு­ப­டி­யில் புத்­தக விற்­பனை செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

சென்­னை­யில் அமைந்­துள்ள இந்­நி­று­வ­னத்­தின் பொன்­விழாவை முன்­னிட்டு, அந்­நி­று­வ­னத்­தால் வெளி­யி­டப்­பட்ட இலக்­க­ணம், இலக்­கி­யம், மருத்­து­வம், காலக்­கணி­தம் தொடர்­பான நூல்­கள், அக­ராதி, அரசு போட்­டித் தேர்­வு­க­ளுக்­கான நூல்­கள் என அரிய நூல்­கள் தள்­ளு­படி விலை­யில் விற்­பனை செய்­யப்­பட உள்­ளன.

டிசம்­பர் முதல் ஜன­வரி வரை வார நாட்­களில் உல­கத் தமி­ழா­ராய்ச்சி நிறு­வ­னத்­தில் நூல்­களை வாங்­க­லாம். இணை­யம் மூலம் பதிவு செய்­வ­தன் மூலம் நூல்­க­ளைப் பெற­லாம். தமிழ் ஆய்வு மேற்­கொள்­ளும் மாண­வர்­கள், தமிழ் ஆர்­வ­லர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு இந்­தத் தள்­ளு­படி விற்­பனை மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.

கூடு­தல் விவ­ரங்­க­ளுக்கு 044-22542992, 22540087 ஆகிய தொலை­பேசி எண்­களில் தொடர்பு­கொள்­ள­லாம் என்று உல­கத் தமிழா­ராய்ச்சி நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் விஜ­ய­ரா­க­வன் தெரி­வித்­துள்­ளார்.

குறிப்புச் சொற்கள்