அதிர்ச்சியில் உயிரிழந்த ரஜினி ரசிகர்

அதிர்ச்சியில் உயிரிழந்த ரஜினி ரசிகர்

1 mins read
4dfb41a7-7da9-425e-8d0d-306fd4a2352c
படம்: தமிழக ஊடகம் -

விழுப்புரம் அருகே ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முடிவால் ஏமாற்றமடைந்த ரஜினி ரசிகர் அதிர்ச்சியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம் அருகே பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் தீவிர ரஜினி ரசிகர். ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியானது முதல் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் ரஜினியின் முடிவைக் கேட்டு தனது இறுதி கருத்து என அவர் பதிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ராஜ்குமாருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
ரஜினிஅதிர்ச்சிஉயிரிழப்பு