தமிழகத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் இம்மாதம் 28ஆம் தேதி தைப்பூசத் தேரோட்ட விழா இடம்பெறவுள்ளது. அதில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
தேரோட்ட நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கோவில் நிர்வாகத்திற்கு ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்.
அத்துடன், கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல்வெப்பநிலைப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. கோவில் வளாகத்தில் பஜனை, பக்தி இசைக் குழுவினர்களைப் பாட அனுமதியில்லை.
மாறாக, குறுந்தட்டுகள் மூலம் பக்திப் பாடல்களை ஒலிக்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

