நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு: மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு: மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

1 mins read
3175d347-44cd-49ba-ac94-15e49a140897
விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படம்: தமிழக ஊடகம் -

நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையின் சாலிகிராமத்தில் உள்ள தமது வீட்டில் இருந்த அவருக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 59 வயதாகும் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்