சென்னை: தமிழக அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தர விட்டுள்ளார். அதன்படி, கோவில் நிலங்கள், நிர்வாகம், அர்ச்சகர்கள், திருப்பணிகள், விழா உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட உள்ளன.

