மூன்று கி.மீ. தூரம் நடந்தே சென்ற கொவிட்-19 நோயாளி

மூன்று கி.மீ. தூரம் நடந்தே சென்ற கொவிட்-19 நோயாளி

1 mins read
5196a22f-5cf8-4313-b743-2f36e78335c3
மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற பாலுமகேந்திரனுக்கு உதவிய காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல். படம்: ஊடகம் -

கும்­ப­கோ­ணம்: கும்­ப­கோ­ணத்­தில் இருந்து எட்டு கி.மீ. தொலை­வில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்­துக்கு பாலு­ம­கேந்­தி­ரன் என்ற இளை­ஞர் நடந்தே சென்­றுள்­ளார்.

இதை­ய­றிந்த காவல் ஆய்வாளர் மணி­வேல், தனி­யார் அவ­சர சிகிச்சை வாக­னத்தை வரவழைத்து, அந்த ேசவைக்­கான கட்­ட­ணத்­தை­ச் செலுத்தி இளை­ஞரை சிகிச்சை பெற அனுப்­பி­வைத்­தார். மனி­த­நே­ய­முள்ள காவல் ஆய்­வா­ள­ருக்கு பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்­றன.

மன்­னார்­கு­டி­யைச் சேர்ந்த பாலு­ம­கேந்­தி­ரன், 29, கொரோனா தொற்று உறு­தி­யா­னதை அடுத்து, தஞ்­சா­வூர் மாவட்­டம், கும்ப கோணத்­தில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னைக்கு சிகிச்சை பெறச் சென்­றார். ஆனால், அங்கு படுக்கை வசதி இல்லை என்­றும் கோவிலாச்­சேரி சிகிச்சை முகா­முக்கு செல்­லும்­ப­டி­யும் மருத்­துவ ஊழி­யர்­கள் அவரை அலைக்­கழித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து எட்டு கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள கோவி­லாச்­சேரி சிகிச்சை முகா­முக்கு பாலு­ம­கேந்­தி­ரன் நடந்தே சென்­றுள்ளார். மூன்று கி.மீ. தூரம் நடந்து சென்ற அவரை, கும்­ப­கோ­ணம் காவல் ஆய்­வா­ளர் மறித்து விசாரித்து, சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார்.