ரூ.85,000க்கு குழந்தையை வாங்கி ரூ.3 லட்சத்துக்கு விற்ற தரகர்
செங்குன்றம்: தனது குழந்தையை விற்பனை செய்த சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த தாய், பெண் தரகர், குழந்தையை வாங்கியவர் ஆகிய மூவரையும் செங்குன்றம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 30. இவர், தனது 10 மாத ஆண் குழந்தை நித்தின்ராஜை, கடந்தாண்டு ஜூலை மாதம் ரூ.85,000க்கு பெண் தரகர் தங்கம், 42, என்பவரிடம் விற்றுள்ளார். தங்கம் குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு ஆந்திராவில் பிடிபட்ட நவநீதம், 69, என்பவரிடம் விற்றுள்ளார். தலைமறைவான ஒருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல்: வேட்பாளர்
பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்
சென்னை: தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் மநீம கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். முதல்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சியின் 47 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

