சென்னை: தமிழகத்தில் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) போடுவதற்குப் பதிவு செய்வதாகக் கூறி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடும் சம்பவங்கள் நிகழ்வதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு இணையக் குற்றச்செயல் தடுப்பு காவல்துறை எச்சரித்துள்ளது.
மக்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடுவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யுமாறும் கைபேசி எண்ணுக்கு அழைப்புகள், குறுஞ்செய்திகள் வருகின்றன.
அதில் உள்ள முகவரியில் விவரங்களைப் பதிவிடுமாறு அவை கேட்டுக்கொள்ளும். கைபேசிக்கு வரும் ஒரு நேர ரகசிய எண்ணைத் தெரிவிக்கும்படி கேட்டு அதை வாங்கிக் கொண்டு அந்தக் கும்பல் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்பின் தெரியாதவர்களை நம்பி விவரங்களைக் கொடுக்கக் கூடாது என்று காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

