நீட் தேர்வு மசோதா: ஆளுநரைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வு மசோதா: ஆளுநரைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

1 mins read
5be089d0-84db-41da-abe1-bf381ce9a7c8
-

சென்னை: மருத்­து­வப் படிப்­புக்­கான நீட் தேர்­வில் இருந்து தமி­ழ­கத்­துக்கு விலக்கு அளிக்­கக் கோரும் தீர்­மா­னத்தை அதி­ப­ருக்கு அனுப்பி வைப்­ப­தாக தமி­ழக ஆளு­நர் தம்­மி­டம் உறுதி அளித்­துள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அவர் நேற்று ஆளு­நர் ஆர்.என்.ரவியை சென்­னை­யில் உள்ள ஆளு­நர் மாளி­கை­யில் சந்­தித்­துப் பேசி­னார்.

அப்­போது தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்ட நீட் தேர்வு மசோதா மீது விரை­வாக நட­வ­டிக்கை எடுத்து, அதி­ப­ரின் பார்­வைக்கு அனுப்பி வைக்க வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­ய­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இச்­சந்­திப்­புக்கு பின்­னர், முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், தமி­ழ­கத்­துக்கு நீட் தேர்­வில் இருந்து விலக்­க­ளிக்­கக் கோரும் மசோ­தாவை அதி­ப­ருக்கு அனுப்பி வைப்­ப­தாக ஆளு­நர் உறுதி அளித்­துள்­ளார் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த அதி­முக ஆட்­சிக்­கா­லத்­தி­லும் நீட் தேர்­வுக்கு எதி­ராக தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

எனி­னும் அதி­பர் அந்த மசோ­தாவை ஏற்க மறுத்­து­விட்­டார்.