கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, ஏராளமான பக்தா்கள் விடிய விடிய கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனா். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருவண்ணாமலை நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது. படம்: ஊடகம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்
1 mins read
-

