ரூ.7,500 சம்பளத்தில் 12,524 பேருக்கு வேலை

ரூ.7,500 சம்பளத்தில் 12,524 பேருக்கு வேலை

1 mins read
3427441c-8445-464f-9692-847b85f0230a
-

புதுடெல்லி: பணி நீக்­கம் செய்­யப்­பட்ட மக்­கள் நலப் பணி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் வேலை வழங்­கப்­படும் என்று உச்ச நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பான வழக்­கில் பிர­மா­ணப் பத்­தி­ரம் தாக்­கல் செய்­துள்ள தமி­ழக அரசு, பணி நீக்­கம் செய்­யப்­பட்ட 12,524 மக்­கள் நலப் பணி­யா­ளர்­க­ளுக்கு மகாத்மா காந்தி கிரா­மப்­புற வேலை வாய்ப்­புத் திட்ட ஒருங்­கி­ணைப்­பா­ளர் பணி வழங்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

மாதம் 7,500 ரூபாய் சம்­ப­ளத்­தில் இந்­தப் பணி வழங்­கப்­படும் என்­றும் மக்­கள் நலப் பணி­யா­ளர்­கள் யாரே­னும் உயி­ரி­ழந்­தி­ருந்­தால் அவர்­க­ளது குடும்­பத்­தில் ஒரு­வ­ருக்குப் பணி வழங்­கப்­படும் என்­றும் அரசு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வ­ழக்கு நெடுநாளாக நிலு­வை­யில் இருந்து வந்த நிலை­யில், பணி­யா­ளர்­க­ளுக்குப் பணி வழங்க திமுக அரசு முடிவு செய்­துள்­ளதால், இவ்விவ­கா­ரம் விரைவில் முடி­வுக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.