ெஜயலலிதா உதவியாளரிடம் விசாரணை

ெஜயலலிதா உதவியாளரிடம் விசாரணை

1 mins read
fe275a16-3e99-420a-8049-bae4c891d919
-

கோவை: நீல­கிரி மாவட்­டம் கோத்­த­கிரி அருகே மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வுக்­குச் சொந்­த­மான கோட­நாடு எஸ்­டேட் பங்­களா உள்­ளது.

இங்கு கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதி­மன்­றத்­தில் நடந்து வரு­கிறது. 2021 ஆகஸ்ட் முதல் இந்த வழக்­கில் மறு­வி­சா­ரணை நடந்து வரு­கிறது.

கடந்த வாரம் சென்­னை­யில் உள்ள சசி­க­லா­வின் வீட்­டில் வைத்து அவ­ரி­டம் இரு நாட்­கள் கோட­நாடு வழக்கு தொடர்­பாக மேற்கு மண்­டல ஐ.ஜி.சுதா­கர் தலை­மை­யி­லான தனிப்­படை காவல்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர்.

அத­னைத் தொடர்ந்து, ஜெய

­ல­லி­தா­வின் நேர்­முக உத­வி­யா­ள­ராக இருந்த பூங்­குன்­றன் என்­ப­வ­ரி­டம் விசா­ரணை நடத்த தனிப்­படை காவல்­துறை அதி­கா­ரி­கள் முடிவு செய்­த­னர்.

விசா­ர­ணைக்கு வருமாறு சில நாட்­க­ளுக்கு முன்பு அவ­ருக்கு அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டது.

அதன்­படி நேற்­றுக் காலை 10 மணி­ய­ள­வில் கோவை வந்த அவரை தனிப்­படை காவல்­து­றை­யி­னர் கோவை காவல்­துறை பயிற்­சிப் பள்ளி மைதா­னத்­தில் உள்ள அலு­வ­ல­கத்­திற்கு அழைத்­துச் சென்­ற­னர்.

அங்கு வைத்து அவ­ரி­டம் கோட­நாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்­பான கேள்­வி

­க­ளைச் கேட்டு விசா­ரணை நடத்­தி­னர். அவ­ரும் தனக்­குத் தெரிந்த தக­வல்­கள் அனைத்­தை­யும் அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்­தார். அவற்றை அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனர்.