அன்புமணி: இணைய வழி சூதாட்டத்தால் தமிழகத்தில் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும்

அன்புமணி: இணைய வழி சூதாட்டத்தால் தமிழகத்தில் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும்

2 mins read
52d6b9fc-be1f-49cf-a048-f72f9e01be72
அன்புமணி. படம்: ஊடகம் -

சென்னை: இணை­யம் வழி நடை­பெ­றும் சூதாட்­டங்­கள் கொலை, கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளைத் தூண்டு­வ­தாக பாமக இளை­ய­ர­ணித் தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், 'ஆன்­லைன்' சூதாட்­டத்­திற்கு உட­ன­டி­யாக முடிவு கட்­டப்­ப­ட­வில்லை என்­றால், தமி­ழ­கத்­தில் ஏரா­ள­மான குடும்­பங்­கள் நடுத்­தெ­ரு­வுக்கு வந்து விடும் என்று எச்­ச­ரித்­துள்­ளார்.

மேலும், வாழ வேண்­டிய இளை­ஞர்­கள் குற்­ற­வா­ளி­க­ளா­கக்­கூ­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அன்­பு­மணி, அண்­மை­யில் நிகழ்ந்­துள்ள சில சம்­ப­வங்­க­ளை­யும் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"சென்னை திரு­வான்­மி­யூர் ரயில் நிலை­யத்­தில் தொடர்ந்து பய­ணி­க­ளி­டம் சங்­கி­லிப் பறிப்பு உள்­ளிட்ட குற்­றச் செயல்­களில் ஈடு­பட்டு வந்த மயி­லாப்­பூ­ரைச் சேர்ந்த ஜெய­ரா­மன் என்­ப­வர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். இத்­த­கைய குற்­றங்­க­ளைச் செய்ய அவரை தூண்­டி­யது 'இணைய வழி' சூதாட்­டம்­தான்.

"சென்னை மாந­க­ராட்­சி­யில் தற்­கா­லிக ஊழி­ய­ராக பணி­யாற்றி வரும் அவர் அந்­தச் சூதாட்­டத்­திற்கு அடி­மை­யா­கி­யுள்­ளார். அதற்கு மாந­க­ராட்­சிப் பணி மூலம் கிடைக்­கும் ஊதி­யம் போத­வில்லை என்­ப­தால், நகைக்­கொள்ளை உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்டு வந்­த­தாக தெரி­ய­வந்­துள்­ளது," என்று அன்­பு­மணி ரா

ம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

சூதாட்­டத்­தில் பணத்தை இழந்­த­வர்­கள் தங்­கள் உயிரை மாய்த்­துக் கொண்­ட­தா­க­வும் கொலை­களை செய்து கொள்­ளை­ய­டித்­த­தா­க­வும் குறிப்­பிட்­டுள்ள அவர், இப்­போது சிலர் தொடர் சங்­கி­லிப் பறிப்­பு­களில் ஈடு­பட்டு வரு­வ­தா­கக் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"எனவே கொலை, கொள்­ளை­க­ளைத் தூண்­டும் இந்­தச் சூதாட்­டத்­துக்கு உட­ன­டி­யாக முடிவு கட்­டப்­ப­ட­வில்லை என்­றால், ஏரா­ள­மான குடும்­பங்­கள் நடுத்­தெ­ரு­வுக்கு வந்து விடும்.இதனை ஒழிக்க கொள்கை அள­வில் தமி­ழக அரசு ஒப்­புக் கொண்­டி­ருக்­கிறது. அதற்­கான தீர்வு புதிய சட்­டமே தவிர, உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு அல்ல.

"எனவே, இனி­யும் தாம­திக்­கா­மல் இணைய வழி சூதாட்­டத்தை தடுக்க உயர் நீதி­மன்ற வழி­காட்­டு­தல்­படி புதிய தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக இயற்ற வேண்­டும்," என அன்­பு­மணி ராம­தாஸ் மேலும் வலி­யு­றுத்தி உள்­ளார்.