ஓமிக்ரான் புதிய திரிபால் தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு

ஓமிக்ரான் புதிய திரிபால் தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு

1 mins read
e8147382-be54-4bba-b704-c4d797c62d1e
-

சென்னை: ஓமிக்­ரா­னின் புதிய வகை திரிபு பாதிப்பு தமி­ழ­கத்­தில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

எனி­னும், பாதிக்­கப்­பட்­ட­வர் குண­ம­டைந்­துள்­ள­தாக தமிழக மக்கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யம் தெரி­வித்­துள்­ளார். சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், மாநி­லத்­தில் கொரோனா பாதிப்பு கட்­டுக்­குள் இருப்­ப­தாக கூறி­னார்.

"ஓமிக்­ரான் பிஏ-4 என்ற புதிய திரிபு தற்­போது பல்­வேறு நாடு­களில் பரவி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், செங்­கல்­பட்­டைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு அந்த பாதிப்பு இருப்­பது அண்­மை­யில் உறுதி செய்­யப்­பட்­டது.

"இதை­ய­டுத்து அவர் தொற்­றில் இருந்து முழு­மை­யாக மீண்­டு­விட்­டார் என மருத்­து­வர்­கள் உறுதி செய்­துள்­ள­னர். மேலும், அவ­ரு­டன் நெருக்­க­மாக இருந்த யாருக்­கும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை," என்று அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யம் தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தில் தற்­போது ஒரு­வர்­கூட கொரோனா பாதிப்­புக்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற­வில்லை என்று குறிப்­பிட்ட அவர், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது தொடர்­பாக அரசு தொடர்ந்து விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என்­றார்.