சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களிடம் நடத்திய சோதனையில், 150 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 14 கோடி ரூபாய் ரொக்கம், 10 கோடி மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் பழனி சாமிக்கு மிகவும் நெருக்கமானவரான ராமு மற்றும் அவரது மகன்கள் ஆகியோருக்குச் சொந்தமான ஜெய பாரத் கிளாட்வே கிரீன் சிட்டி, அன்னை பாரத், ஆர்ஆர் கட்டுமான நிறுவனம் ஆகியவை மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 20ஆம் தேதி தீவிர சோதனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, நான்கு நாள்களுக்கும் மேலாக இந்த நிறு வனங்களுக்குச் சொந்தமான 30 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், கணக்கில் வராத பணம், நகைகள், பினாமி சொத்துக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த இரு நிறுவனங்களிலும் 150 கோடி ரூபாய் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்ட தாகவும் 14 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயபாரத் கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனம் மிகப்பெரிய அள வில் வரிஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணக்கில் வராத ரொக்கப் பரிமாற்றங்களைக் கணக்கில் வைத்துக்கொள்ள தனியாக மென்பொருள் பயன்படுத்தி கணக்குகளைக் கையாண்டுள்ளனர். இதேபோல் ஆர்ஆர் கட்டுமான நிறுவனம் போலியான கணக்குகளைக் காட்டி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

