மழை வெள்ளம்; 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சிக்கிய ஓசூர் மக்கள்

மழை வெள்ளம்; 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சிக்கிய ஓசூர் மக்கள்

1 mins read
b33a37bf-4448-4e46-9687-37a51c204ae7
சமத்துவபுரம் பகுதியிலும் மழை நீர் வீடுகளைச் சூழ்ந்ததாகக் கூறப்பட்டது.படம்: தமிழக ஊடகம் -

ஓசூர்: கிருஷ்­ண­கிரி மாவட்­டம் ஓசூ­ரில் நேற்று முன்­தி­னம் இரவு 72 மி.மீ. மழை பதி­வா­னது.

கே.சி.சி.நகர் பகு­தி­யில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட வீடு­க­ளுக்­குள் மழை நீர் புகுந்­தது. அப்­ப­கு­தி­யில் புதி­தாக அமைக்­கப்­பட்ட பால­மும் மழை வெள்­ளத்­தில் மூழ்­கி­யது. மக்­கள் வீடு­களை விட்டு வெளியே வர­மு­டி­யா­மல் தவித்­த­னர். மாந­க­ராட்சி ஊழி­யர்­களும் தீய­ணைப்­புத் துறை­யி­ன­ரும் வெள்ள நீரை வெளி­யேற்­றும் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். சில இடங்­களில் வீடு­களில் சிக்­கிய மக்­கள் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.