'தமிழைத் தேடி' ராமதாஸ் விரைவில் பயணம்

'தமிழைத் தேடி' ராமதாஸ் விரைவில் பயணம்

fallback

21 Jan 2023 - 5:30 am

2 mins read

சென்னை: தமிழ்­நாட்­டில் தமிழ் மொழி தொடர்­பான அனைத்து கோரிக்­கை­க­ளை­யும் நிறை­வேற்ற வலி­யு­றுத்தி 'தமி­ழைத் தேடி' என்ற தலைப்­பில் பரப்­புரைப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருப்­ப­தாக பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் அறி­வித்­துள்­ளார்.

"உல­கின் மூத்த மொழி­யான தமி­ழின் இனிமை, பழமை, பெரு­மை­கள், சிறப்­பு­கள் ஆகி­யவை குறித்து மகிழ்ச்சி அடைய ஏரா­ள­மான செய்­தி­கள் உள்­ளன.

"ஆனால், தமிழ்­நாட்­டில் இன்று தமி­ழின் இருப்பு எவ்­வாறு உள்­ளது? என்­பதை நினைக்­கும் போது­தான் பெரும் கவ­லை­யும், வருத்­த­மும் வாட்­டு­கின்­றன. தமிழ்­நாட்­டில் 'எங்­கும் தமிழ்... எதி­லும் தமிழ்' என்­ப­து­தான் தமி­ழ­றி­ஞர்­கள் மற்­றும் தமிழ் உணர்­வா­ளர்­க­ளின் நிலைப்­பா­டும், எதிர்­பார்ப்­பும் ஆகும். ஆனால், தமிழ்­நாட்­டில் 'எங்கே தமிழ்?' என்­ப­து­தான் எதார்த்­தம். தமி­ழில் பிற­மொ­ழிச் சொற்­க­ளின் கலப்பு, வணிக நிறு­வ­னங்­க­ளின் பெயர்ப்­ப­ல­கை­கள் பிற மொழி­களில் எழு­தப்­ப­டு­தல், அரசு நிர்­வா­கத்­தி­லும் கல்வி நிறு­வ­னங்­க­ளி­லும் தமி­ழுக்கு உரிய இடம் மறுக்­கப்­ப­டு­வது போன்­றவை காலம் கால­மா­கவே தொடர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றன.

"ஆனால், அனைத்து இடங்­க­ளி­லும் தமிழை நிலைநிறுத்த சட்­டங்­கள் இயற்­றி­யும்கூட நிலைமை மாறா­தது வலியை ஏற்­ப­டுத்­து­கிறது.

"தமிழ்­நாட்­டில் தமிழ் மொழி தொடர்­பான அனைத்து கோரிக் கைகளை நிறை­வேற்ற வலி யுறுத்தி, 'தமி­ழைத் தேடி' என்ற தலைப்­பில் பரப்­புரைப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றேன்.

"உலக தாய்­மொழி நாளான பிப்­ர­வரி 21ஆம் நாள் சென்னை வள்­ளு­வர் கோட்­டம் அரு­கில் தொடங்­கும்.

"இந்த பரப்­புரைப் பய­ணம் மது ராந்­த­கம், திண்­டி­வ­னம், புதுச்­சேரி, கட­லூர், சிதம்­ப­ரம், மயி­லா­டு­துறை, கும்­ப­கோ­ணம், தஞ்­சா­வூர் தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கம், திருச்சி, திண்­டுக்­கல் வழி­யாக சங்­கம் வைத்து தமிழ் வளர்த்த மது­ரை­யில் வரும் பிப்­ர­வரி 28ஆம் நாள் நிறை­வ­டை­யும்.

"தமி­ழ­றி­ஞர்­கள், தமிழ் ஆர்­வ­லர்­கள், கல்­வித்­துறை, கலைத்­துறை உள்­ளிட்ட பல்­வேறு துறை­யி­னர், மாண­வர்­கள், இளை­ஞர்­கள், பொது­மக்­கள் என அனைத்து தரப்­பி­ன­ரும் 'தமி­ழைத் தேடி' பரப்­புரைப் பய­ணத்­தில் பங்­கேற்று ஆத­ர­வ­ளிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று தனது அறிக்­கை­யில் ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.