கந்துவட்டி கொடுமை; தலைகீழாகத் தொங்கி வழக்கறிஞர் போராட்டம்

கந்துவட்டி கொடுமை; தலைகீழாகத் தொங்கி வழக்கறிஞர் போராட்டம்

fallback-0

28 Jan 2023 - 5:30 am

1 mins read

தூத்­துக்­குடி: கந்­து­வட்டி கொடு­மையைக் கண்­டித்து வழக்­க­றி­ஞர் நடத்­திய தலை­கீ­ழா­கத் தொங்­கும் (படம்) நூதன போராட்­டம் தூத்­துக்­கு­டி­யில் பொது­மக்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­தது.

கடம்­பூ­ரைச் சேர்ந்­த­வர் அய்­ய­லுச்­சாமி. வழக்­க­றி­ஞ­ரான இவர் கந்­து­வட்டி குறித்து மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார். இந்­நி­லை­யில், கந்­து­வட்­டி­யால் பல குடும்­பங்­கள் வெகு­வா­கப் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி நேற்று முன்­தி­னம் நூத­னப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டார் அய்­ய­லுச்­சாமி.

கடம்­பூர் காட்­டுப்­ப­கு­திக்­குச் சென்ற அவர் அங்­குள்ள புளி­ய­ம­ரத்­தில் தலை­கீ­ழா­கத் தொங்­கி­னார். நண்­பர்­கள் சிலர் அவ­ரது காலில் கயி­று­கட்­டி­ய­து­டன் புளிய மரத்­தில் தலை­கீ­ழா­கத் தொடங்­க­விட்­ட­னர். சுமார் ஒரு­மணி நேரம் ஆர்ப்­பாட்­டம் நடத்­திய அவர், கந்து வட்டி கொடு­மை­யால் பாதிக்­கப்­படும் குடும்­பங்­களை அடை­யா­ளம் கண்டு, மாவட்ட நிர்­வா­கம் உதவ வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.