சென்னை: தமிழகத்தில் மேலும் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராகவும், எரிசக்தித்துறை செயலாளராக பணியாற்றி வந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் புதுப்பொறுப்புகளை ஏற்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவுகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் இவ்வாறு மாற்றப்படுவது வழக்கம்தான் என்றாலும் முக்கியமான சில துறைகள் சார்ந்த அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டிருப்பதற்கான பின்னணிக் காரணம் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மேலும் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.