மதுரை: பூட்டிக் கிடந்த வீட்டுக்குள் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் மதுரையில் பெரும் பரபரப்பு நிலவியது.
மருந்து விற்பனையாளரான அஜித் என்பவர் தன் மனைவியுடன் மதுரையில் கரிமேடு பகுதியில் வசித்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு அஜித் வீட்டுக்குள் திடிரென வெடிச்சத்தம் கேட்டது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அண்டை வீட்டுக்காரர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இரு நாள்களுக்கு முன்பு அஜித்தும் அவரது மனைவியும் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
காவல்துறையினர் வீட்டிக்குள் நுழைந்து பார்த்தபோது மர்ம பொருள் வெடித்துச் சிதறியிருப்பது தெரியவந்தது. வீட்டிலிருந்த சில பொருள்களும் சிதறிக்கிடந்தன. வெடித்தது நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் வெடிபொருளா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.