சென்னை: நில அபகரிப்பு வழக்கில் இருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை சைதாப்பேட்டை பகுதியில் 3,630 சதுர அடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக பொன்முடி மீது புகார் எழுந்தது.
இதையடுத்து, 2003ஆம் ஆண்டு அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு பொன்முடி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 10 பேரை போதிய ஆவணங்களை என்று குறிப்பிட்டு, நீதிமன்றம் தற்போது விடுதலை செய்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் எனத் தெரிகிறது.