உக்ரேன் போர்: மருத்துவ மாணவர்களுக்குப் பாதிப்பு; அமைச்சர் விளக்கம்

1 mins read
99d95871-3082-4b94-ad4f-209d79bea01a
அமைச்சர் செஞ்சி மஸ்தான். - படம்: ஊடகம்

ஈரோடு: உக்ரேன் போரில் பாதிப்பு ஏற்பட்டு தமிழகம் திரும்பிய வேளாண்மை, பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

எனினும், மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சொந்த மாநிலத்திலேயே படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

“எனினும், மத்திய அரசு உரிய பதிலைத் தெரிவிக்கவில்லை. இதனால், மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதேநேரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கான அதிகாரத்தில், பொறியியல், வேளாண் கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்,” என்று சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

மருத்துவ மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முன்னிலைப்படுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
உக்ரேன்மாணவர்மருத்துவம்