அடுத்தாண்டு மத்தியில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகளில் கட்சிகள் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளன.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18ஆம் தேதி கூட உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம், பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து தனது இணையதளத்திலும் பதிவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தன்னை அழைக்காததால், அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. பாஜக-வுடன் தொடர்பில் இருந்தாலும் அரசியலில் அவரை பாஜக கைவிட்டதாகவே இப்போது பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்., திரிணாமுல் காங்., என 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.

