சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை

சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை

1 mins read
9b653179-440d-4128-8b27-2fb284dad0a8
அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசனத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கையெழுத்துப் பெறும் இயக்கத்தை பொன்னேரியில் தொடங்கிவைத்தார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

அரியலூர்: சோழர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி ஐந்து லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை நேற்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கக்கோரி அம்மாவட்டத்தின் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள பொன்னேரியில் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கிவைத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் பாமகவினர் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்